Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு தீ வைக்க முயற்சி

மணிப்பூரில் பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு தீ வைக்க முயற்சி

By: Nagaraj Sun, 18 June 2023 12:08:06 PM

மணிப்பூரில் பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு தீ வைக்க முயற்சி

மணிப்பூர்: பாஜக தலைவர் வீடுகளுக்கு தீ வைக்க முயற்சி... மணிப்பூரில் கையில் தீப்பந்தங்களை ஏந்திய வன்முறை கும்பல் பாஜக தலைவர்களின் வீடுகள் அலுவலகங்களுக்குத் தீ வைக்க முயன்றது.

அதனை ராணுவமும், அதிரடி காவல் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஒரு வீட்டை முற்றிலுமாக சூறையாடிய வன்முறையாளர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

bjp office,women,violence,army uniform,manipur ,பாஜக அலுவலகம், பெண்கள், வன்முறையாளர்கள், ராணுவ சீருடை, மணிப்பூர்

இரண்டு நாட்களுக்கு முன் வெளியுறவு இணை அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்குத் தீவைத்த வன்முறை கும்பல் நேற்று இம்பால் அருகே உள்ள பாஜக நிர்வாகி சாரதாதேவியின் வீட்டுக்குத் தீ வைக்க முயன்றது.

இன்னொரு கும்பல் பாஜக அலுவலகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. இவ்விரு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. இதனிடையே பெண்கள் உள்ளிட்ட ஏராளமான வன்முறையாளர்கள் ராணுவச் சீருடை அணிந்து கையில் துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிருஷ்னுபுர் மாவட்டத்தில் சரக்கு லாரிகளில் நடமாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|