Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத் தேர்தலால் கொரோனா பரவியது என்ற பேச்சு எழாதவாறு நடத்த முயற்சி; மஹிந்த தேசப்பிரிய சொல்கிறார்

பொதுத் தேர்தலால் கொரோனா பரவியது என்ற பேச்சு எழாதவாறு நடத்த முயற்சி; மஹிந்த தேசப்பிரிய சொல்கிறார்

By: Nagaraj Mon, 08 June 2020 07:44:45 AM

பொதுத் தேர்தலால் கொரோனா பரவியது என்ற பேச்சு எழாதவாறு நடத்த முயற்சி; மஹிந்த தேசப்பிரிய சொல்கிறார்

கொரோனா பரவல் ஏற்படாத அளவிற்கு பொதுத் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விகாரையில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையத்தில் நேற்று தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

mahinda deshapriya,democracy,election,corona spread,rehearsal ,மஹிந்த தேசப்பிரிய, ஜனநாயகம், தேர்தல், கொரோனா பரவல், ஒத்திகை

மேலும் அவர் கூறியதாவது; கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாத்து தேர்தலை நடத்துவதற்கான ஏதுவான நிலைமைகள் குறித்து ஆராய்வதே தமது கடமை. மாறாக தேர்தலை நடத்த எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பிடுவது தமது கடமை அல்ல.

ஜனநாயகத்தின் விலையை மதிப்பிட முடியாது. அதனை இலாபமாக பெற முடியாது. பல உயிர்களை பலிகொடுத்தே ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளதாகவும் கூறிய மஹிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்தியதால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது என கேட்க கூடாத அளவுக்கு தேர்தலை நடத்த முடிந்தளவு முயற்சிப்பதாகவும் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :