Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் என்கிறார் அமைச்சர்

நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் என்கிறார் அமைச்சர்

By: Nagaraj Sun, 17 July 2022 10:19:22 PM

நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் என்கிறார் அமைச்சர்

சென்னை: தற்போதைய சூழலில் அவசியம்... நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும் நடக்கிறது. இதில், 18.72 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகள் மற்றும் ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும், 3,500 மையங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5:20 வரை நடைபெறும் இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

principal,attempt,necessary,neet exam,exemption,students ,முதல்வர், முயற்சி, அவசியம், நீட் தேர்வு, விலக்கு, மாணவர்கள்

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள். தேர்வு தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது. பலமுறை முயற்சித்தும் கூட தேர்வில் வெற்றி பெற முடியும். நீட் தேர்வு குறித்து யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் ஆகும்.


நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அரசு உறுதிப்படுத்தி உள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :