அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு
By: vaithegi Mon, 20 Nov 2023 3:42:54 PM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்தியிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டுவிடும் என அறிவிப்பு ...தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 50% வரையிலும் உயர்த்தப்பட்டது.
அதாவது, தேர்வு நடத்தும் செலவினங்கள் அதிகரிப்பதால் தான் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்து உள்ளார். ஆனால், திடீரென அனைத்து தேர்வு கட்டணமும் உயர்த்தப்பட்டதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பழைய தேர்வு கட்டணமே வசூல் செய்யப்படும் என்றும், ஏதேனும் மாணவர்கள் கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுவிடும் என்றும்
அண்ணா பல்கலை துணைவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த கல்வியாண்டிற்கான தேர்வு கட்டணம் குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.