Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடி அமாவாசை பிதிர் கடன்களை நிறைவு செய்ய கடலோரங்களில் செல்ல அனுமதி

ஆடி அமாவாசை பிதிர் கடன்களை நிறைவு செய்ய கடலோரங்களில் செல்ல அனுமதி

By: Nagaraj Wed, 08 July 2020 7:01:35 PM

ஆடி அமாவாசை பிதிர் கடன்களை நிறைவு செய்ய கடலோரங்களில் செல்ல அனுமதி

பிதிர் கடன்கள் நிறைவு செய்ய அனுமதி... ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள் அவர்களுக்கான வருடாந்த நினைவு கூரலையும் அதற்கான பிதிர்க் கடன்களையும் நிறைவேற்றி வருவது வழமை. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளதால் குளங்கள் மற்றும் கடலோரங்களில் இத்தகைய பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.

permits,cabinets,creeks,coasts ,அனுமதி, அமைச்சரவை, கிரிகைகள், கடலோரங்கள்

எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த நினைவு கூரும் தினமான ஆடி அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் அத்தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது தந்தையருக்கு பிதிர்கடனை நிறைவேற்றுவதற்கு பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் குறித்த தரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவையில் அது தொடர்பில் பரஸ்தாபித்திருந்தார். இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதிகமாக இருப்பதால் அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரிகைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|