Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க கோரி தமிழகம் முழுவதும் 10-ந்தேதி கடைகள் அடைப்பு

கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க கோரி தமிழகம் முழுவதும் 10-ந்தேதி கடைகள் அடைப்பு

By: Monisha Wed, 05 Aug 2020 12:54:32 PM

கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க கோரி தமிழகம் முழுவதும் 10-ந்தேதி கடைகள் அடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்பட 38 மார்க்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:- "தமிழக அரசு வருகிற 10-ந்தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றனர்.

commerce,koyambedu,shops,shutters,vikkiramaraja ,வணிகர் சங்கம்,கோயம்பேடு,கடைகள்,அடைப்பு,ஏ.எம்.விக்கிரமராஜா

நிரந்தர சுகாதார மையம் அமைக்கவேண்டும். மார்க்கெட் கமிட்டி உருவாக்க வேண்டும். கடைகளுக்கு காலநேரம் நிர்ணயம், வார விடுமுறை, சுகாதார நடவடிக்கைகள் அளிக்க வேண்டும். கோயம்பேடு சந்தையை வருகிற 10-ந்தேதி திறப்பதற்கான உத்தரவை அளிக்க அரசு தவறினால், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் ஒரு நாள் முழுமையாக அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

போராட்டத்தை தவிர்க்க, முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|