- வீடு›
- செய்திகள்›
- மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, கல்வி ஊக்கத்தொகை .. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, கல்வி ஊக்கத்தொகை .. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள்
By: vaithegi Wed, 10 Aug 2022 4:04:29 PM
சென்னை: தமிழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கிலும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளிலேயே 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி அந்த மாணவி மேற்படிப்பை முடிக்கும் வரைக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை மாணவியின் வங்கி கணக்கிற்கே அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
அதே போல, அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஊக்கத்தொகையை பெற தகுதியும் விருப்பமும் பெற்ற மாணவர்கள் jdvocational@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மாணவரின் வங்கி புத்தகத்தின் நகலினை அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வங்கி நகலினை அனுப்ப ஆகஸ்ட் 16 கடைசி நாள் என்பதால் அதற்குள் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் EMIS போர்ட்டலில் சென்று பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.