Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Karunakaran Wed, 02 Sept 2020 10:19:17 AM

ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை அளவை இந்திய வானிலைத்துறை கணக்கிட்டு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை மழைக்காலமாக கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த மழைப்பொழிவு கடந்த 44 ஆண்டுகளில் அதிகமான மழைப்பொழிவு ஆகும். அதேநேரம் கடந்த 120 ஆண்டுகளில் இது 4-வது அதிக மழைப்பொழிவு ஆகும். கடந்த 1926-ம் ஆண்டு 33 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. அடுத்ததாக 1976-ல் 28.4 சதவீதமும், 1973-ல் 27.8 சதவீதமும் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது.

august,27 percent,rainfall,meteorological department ,ஆகஸ்ட், 27 சதவீதம், மழை, வானிலை ஆய்வு துறை

கடந்த மாதம் வங்காள விரிகுடா கடலில் 5 முறை குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமாகவே, ஆகஸ்டு மாதம் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31 வரையிலான காலகட்டத்திலும் வழக்கமான அளவை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்திருப்பதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது. பீகார், அசாம், ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Tags :
|