Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2020 ஆம் ஆண்டு வரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு வரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

By: Monisha Wed, 17 June 2020 5:51:21 PM

2020 ஆம் ஆண்டு வரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 82,64,468 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 43,21,498 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு வரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனினும் அதில் சில விலக்குகளையும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

border closure,australia,corona virus,students ,எல்லை மூடல்,ஆஸ்திரேலியா,கொரோனா வைரஸ்,மாணவர்கள்

இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் பிர்மின்கங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வெளிநாடுகளிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைத் தடுத்து வருகிறோம். ஆஸ்திரேலியாவில் எல்லை மூடல் 2020 ஆம் ஆண்டுவரை தொடரும். எனினும் இதிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் 7,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6,859 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags :