Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

By: Karunakaran Sat, 04 July 2020 3:15:23 PM

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சீனாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது என சீனா உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

hong kong,australia,asylum,scott morrison ,ஹாங்காங், ஆஸ்திரேலியா, புகலிடம், ஸ்காட் மோரிசன்

இந்நிலையில், சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு தஞ்சமளிப்பது போன்ற உதவிகளை செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, ஹாங்காங்கில் இருந்து வரும் அகதிகளுக்கு என தனியாக தாய்லாந்து முகாம் அமைத்துள்ளது. இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் விசாவுடன் இருக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்களுக்கான குடியுரிமையை பிரதமர் போரிஸ் ஜான்சன் நீட்டித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags :
|