Advertisement

சீனாவின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி

By: Monisha Fri, 12 June 2020 09:29:05 AM

சீனாவின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்துதான் பரவத்தொடங்கியது. ஆனால் சீனா கொரோனா தொற்று விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு தீவிரத்தை மறைத்தது. அதனால் தான் இன்று உலகம் முழுதும் கொரோனா பரவி பல அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா சீனாவை குற்றம் சாட்டியதோடு இது தொடர்பான அமெரிக்க விசாரணைக்கும் ஆதரவு அளித்து சீனாவை பகைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியா சீனா இடையே ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

corona virus,australia,china,prime minister scott morrison,trade war ,கொரோனா வைரஸ்,ஆஸ்திரேலியா,சீனா,பிரதமர் ஸ்காட் மோரிசன்,வர்த்தகப்போர்

இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டினால் ஆஸி.யிலிருந்து வரும் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது. மேலும் பார்லி இறக்குமதிக்கு அதிக கட்டணம் வசூலித்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் சீனர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் சீனா தெரிவித்தது. சீன சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா அறிவுறுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் கூறுகையில், “நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம். எங்கள் மதிப்புகளை நாங்கள் விற்கத் தயாராக இல்லை.” எனத் தெரிவித்தார்.

Tags :
|