Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்து அதிகாரிகள் குழப்பம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்து அதிகாரிகள் குழப்பம்

By: Nagaraj Sun, 05 July 2020 8:01:52 PM

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்து அதிகாரிகள் குழப்பம்

பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் கல்வித்துறையினர்... கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது

இந்நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது.

confusion,10th grade,students,mastery,officials ,குழப்பம், 10ம் வகுப்பு, மாணவர்கள், தேர்ச்சி, அதிகாரிகள்

அதுகுறித்து சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழப்பம் எழுந்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களின் நிலை குறித்த சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆப்சென்ட் போட்டால் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக எப்படி அறிவிக்கப்படுவார்கள் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags :