Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்

By: Nagaraj Sun, 19 Mar 2023 9:36:53 PM

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்

உத்திரபிரதேசம்: ரேஷன் கடைகளில் தானியங்கி ஏடிஎம்கள்... ரேஷன் கடைகளில் நின்று பொருட்கள் வாங்கும் காலம் முடிந்துவிட்டதாகவும், இதற்காக உத்திரபிரதேச மாநிலத்தில் தானியங்கி ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.டி.எம்.களில் ரேஷன் கார்டுகளை பதிவு செய்தவுடன் தேவையான பொருட்கள் உடனடியாக கிடைக்கும் வகையிலும், கைரேகை பதிவுக்கு பின் ஏ.டி.எம்., மூலம் பொருட்கள் வரும் வகையிலும் இந்த தானியங்கி ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

atm,good,up government, ,அதிரடி, அறிவிப்பு, உ.பி அரசின், பொதுமக்கள், இயந்திரங்கள்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நொய்டாவில் முதற்கட்டமாக இந்த ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அரிசி, கோதுமை நிரப்பப்பட்டால், இந்த இயந்திரங்கள் பயனாளிகளுக்கு 7 நிமிடங்களில் சரியான எடையைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எந்த முறைகேடுகளையும் மேற்கொள்ள முடியாது.

இந்த இயந்திரங்களை மாநிலம் முழுவதும் அமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|