Advertisement

இலையதிர் காலம் கொரோனா புதிய அபாயங்களைக் கொண்டு வரும்

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:47:35 PM

இலையதிர் காலம் கொரோனா புதிய அபாயங்களைக் கொண்டு வரும்

சுகாதார அதிகாரி எச்சரிக்கை... எதிர்வரும் இலையதிர் காலம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களில் புதிய அபாயங்களைக் கொண்டு வரும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோடைகாலத்தின் இறுதி நீண்ட வார இறுதியில், தங்கள் சொந்த ஆபத்து காரணிகளையும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்தவொரு நேரில் கூடிய கூட்டங்களுக்கான திட்டங்களின் விபரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒட்டாவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே டாக்டர் தெரேசா டாம் இந்த கருத்தினை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உங்களுடன் இருப்பவர்களை அறிவது சுவாச நோயை ஏற்படுத்தும் வைரஸைத் தொற்றுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.

spring,government institutions,kovit-19,warning ,வசந்த காலம், அரசாங்க நிறுவனங்கள், கொவிட் -19, எச்சரிக்கை

கொரோனா வைரஸை கையாண்ட பல மாதங்களுக்குப் பிறகு அரசாங்க நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் தனிநபர்கள் இப்போது கொவிட்-19 தொற்றை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

எனவே கனேடியர்கள் எதிர்கொள்ளும் நிலைமை வசந்த காலத்தில் நோய் பரவலாக பரவத் தொடங்கிய காலத்திலிருந்து வேறுபட்டது” என கூறினார்.

Tags :
|