Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையை சேர்ந்த மாணவிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய விருது வழங்கல்

இலங்கையை சேர்ந்த மாணவிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய விருது வழங்கல்

By: Nagaraj Tue, 19 May 2020 1:47:22 PM

இலங்கையை சேர்ந்த மாணவிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய விருது வழங்கல்

அமெரிக்கா கிளெம்சோன் பல்கலைக்கழகத்தின் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருது இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் மாணவி தர்சிகா விக்கினேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் திருகோணமலை நகரைச்சேர்ந்தவர் தர்சிகா விக்கினேஸ்வரன். இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளார். எனினும் அவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது திறமையும், அறிவுக்கூர்மையும் வெளியானது.


usa,university award,jaffna,dharchika ,அமெரிக்கா, பல்கலைக்கழக விருது, யாழ்ப்பாணம், தர்சிகா

வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கண்டறிந்தார். கல்வியில் நன்கு திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார்.

இதையடுத்து அமெரிக்காவில் தர்சிகா உயர் கல்வியைத் தொடர இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜா ரவிச்சந்திரன் உதவிகள் செய்ய கிளென் திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தைப் பெற்றிருள்ளார் தர்சிகா என்பதும் குறிப்பிடத்தக்கது. புவித்தொழில்நுட்பப் பொறியியல் கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார். பேராசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் கலாநிதி பட்டக்கல்வியைத் தொடரவுள்ளார்.

இந்நிலையில்தான் அவருக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய விருது கிடைத்துள்ளது.

Tags :
|
|