Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சியில் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி

By: Nagaraj Sat, 22 Oct 2022 11:04:52 AM

திருச்சியில் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி: செயல் விளக்கம்... திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டு செயல் விளக்கமளித்தனர்.

தீபாவளி மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு தீபாவளியாக அமைய ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் , ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை ஜம்புகேஸ்வரர் இணைந்து பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு கல்லுாரி மாணவர்களுக்கிடையே தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான முதலுதவி மற்றும் செயல் முறை விளக்கம் குறித்தும் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அம்பிகா பாரதிதாசன் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். துறையின் தலைவர் லட்சுமிபிரபா ரோட்டரி மாவட்ட மண்டல செயலாளர் மோகன் மற்றும் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எழில் முன்னிலையில் செய்து காண்பித்தனார்.

organization,awareness,rotary club,leaders,eye hospital ,
ஏற்பாடு, விழிப்புணர்வு, ரோட்டரி கிளப், தலைவர்கள், கண் மருத்துவமனை

ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு தீ விபத்தில் சிக்கியவர்களுக்கும் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்தும், குறிப்பாக கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கப்பட்டது.

இதில் 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதிபா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் முன்னிலையில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஜம்புகேஸ்வர் மற்றும் பட்டர்பிளை தலைவர்கள் திருபாலகிருஷ்ணன் மற்றும் சுபத்ரா மற்றும் குழுமம் இவ்விழாவில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோசப் கண்மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபாபிரபு மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags :