Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் - உத்தவ் தாக்கரே

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் - உத்தவ் தாக்கரே

By: Karunakaran Mon, 27 July 2020 11:19:30 AM

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் - உத்தவ் தாக்கரே

வருகிற ஆகஸ்ட் 5-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாம் என சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே யோசனை கூறியுள்ளார்.

uddhav thackeray,ayodhya,ram temple,veneration ,உத்தவ் தாக்கரே, அயோத்தியா, ராமர் கோயில், பூஜை

இதுகுறித்து உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தபோது, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய கடந்த மார்ச் மாதம் அயோத்திக்கு சென்ற போது, சரயு ஆற்றங்கரையில் பெரும் கூட்டத்தை கண்டேன். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சரயு நதிக்கரையில் மகா ஆரத்தி பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் அவர், ராமர் கோவில் நம்பிக்கைக்குரிய விஷயம். அங்கு மக்கள் வருவதை எவ்வாறு தடுக்க முடியும். அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை நாம் அனுமதிக்கலாமா? எனவே ராமர் கோவில் பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி காட்சி மூலம் நடத்தலாம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

Tags :