Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுத பூஜை ,தீபாவளி ..அரசு பேருந்துகளில் நிரம்பிய முன்பதிவு டிக்கெடுகள்

ஆயுத பூஜை ,தீபாவளி ..அரசு பேருந்துகளில் நிரம்பிய முன்பதிவு டிக்கெடுகள்

By: vaithegi Wed, 18 Oct 2023 1:50:56 PM

ஆயுத பூஜை ,தீபாவளி ..அரசு பேருந்துகளில் நிரம்பிய முன்பதிவு டிக்கெடுகள்


சென்னை: தமிழகத்தில் அடுத்த வாரம் ஆயுத பூஜை பண்டிகை வர இருக்கிறது. அதன் பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். அதனால் பயணிகள் பலர் வெளி ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர்.

அதனால் சென்னையிலிருந்து வருகிற அக். 20,21 மற்றும் 22 ஆம் தேதிகளில் 2265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து விடுமுறை வருவதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் 1 வாரத்திற்கான இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

festival,reservation tickets ,பண்டிகை ,முன்பதிவு டிக்கெடுகள்

மேலும் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த நாளுக்கான முன்பதிவு இடங்களும் நிரம்பிவிட்டன. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு சில சிறப்பு பேருந்துகளில் இருக்கைகளுக்கான முன்பதிவு தவிர மற்ற முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இதனால் தனியார் பேருந்துகளில் அதிகமான கட்டணம் நிர்ணயம் செய்யும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இனி சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கினால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Tags :