ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் ஆயுஷ்மான் பவ இயக்க சிறப்பு முகாம்கள்
By: Nagaraj Mon, 18 Sept 2023 07:08:27 AM
புதுடில்லி: சிறப்பு முகாம்கள்... நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் உள்ள மக்களுக்கு உயர்தர மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவைகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, இந்த மாபெரும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது மத்திய சுகாதாரத் துறை, பிற அரசுத் துறைகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து கிராமப் பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்பட உள்ள ஒரு கூட்டு முயற்சியாகும்.
இன்று முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம்களில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் பவ அட்டைகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.