Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர பப்ஜி கார்ப்பரேஷன் முயற்சி

இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர பப்ஜி கார்ப்பரேஷன் முயற்சி

By: Karunakaran Thu, 10 Sept 2020 2:54:16 PM

இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர பப்ஜி கார்ப்பரேஷன் முயற்சி

இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உட்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின், இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை விநியோகிக்க டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, பப்ஜி மொபைல், இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pubg corporation,pubg processor,india,china ,பப்ஜி கார்ப்பரேஷன், பப்ஜி செயலி, இந்தியா, சீனா

தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்திய சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு பயனர்கள் மீண்டும் ஆன்லைன் களத்தில் இருப்பதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்றும் பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஒரு புதிய உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில், பப்ஜி நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டென்சென்ட் நிறுவனத்துடன் ஆன தனது தொழில்முறை உறவுகளை தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளதால் விரைவில் அந்த நிறுவனம் மீதான தடையை அகற்றுவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|