Advertisement

ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது

By: Nagaraj Tue, 02 June 2020 3:47:08 PM

ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது

மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது... இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

iran,again corona,warning,restrictions,need ,ஈரான், மீண்டும் கொரோனா, எச்சரிக்கை, கட்டுப்பாடுகள், அவசியம்

இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார். ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 7,878 பேர் பலியாகி உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|