Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் 140 கிலோ கோகோயின் மீட்கப்பட்டதன் பின்னணி

சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் 140 கிலோ கோகோயின் மீட்கப்பட்டதன் பின்னணி

By: Nagaraj Mon, 22 June 2020 12:05:09 PM

சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் 140 கிலோ கோகோயின் மீட்கப்பட்டதன் பின்னணி

கோகோயின் மீட்கப்பட்டதன் பின்னணி... சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் இருந்து சுமார் 140 கிலோ அளவுக்கு கோகோயின் மீட்கப்பட்ட நிலையில் அதன் முழு பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் பல கூட்டுறவு கிளைகளில் இருந்து வாழைப்பழ பெட்டிகளில் மறைத்து கடத்தப்பட்ட 140 கிலோ கோகோயின் போதை மருந்து அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த நிலையில் அதன் பின்னணி தொடர்பில் முக்கிய நிபுணர் ஒருவர் முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். கோகோயின் போதை மருந்தானது பெருமளவில் கொலம்பியா, பொலிவியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

cocaine,background,trapped,drug,use ,கோகோயின், பின்னணி, சிக்கியது, போதை மருந்து, பயன்பாடு

பிரேசில் மற்றும் வெனிசுலாவில் உள்ள பெரிய துறைமுகங்களில், கப்பல் துறைமுகத் தொழிலாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு, அங்கிருந்து ரகசியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய துறைமுக ஊழியர்களுக்கு மீண்டும் லஞ்சம் தரப்பட்டு, அந்த போதை மருந்தானது உரியவர்களால் கைப்பற்றப்படுகிறது. பின்னர் இந்த கோகோயின் மறுவிற்பனை செய்யப்பட்டு துறைமுக நகரங்களிலிருந்து ஐரோப்பா முழுவதையும் சென்றடைகிறது.

cocaine,background,trapped,drug,use ,கோகோயின், பின்னணி, சிக்கியது, போதை மருந்து, பயன்பாடு

தற்போது சுவிட்சர்லாந்தில் வாழைப்பழ பெட்டிகளில் கோகோயின் சிக்கியுள்ளது. இது பெரும்பாலும் வாழைப்பழ வியாபாரிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால் தற்போது உரியவர்கள் துறைமுகத்தில் இருந்து தங்களது போதை மருந்து பெட்டியை கைப்பற்றுவதில் தாமதம், அல்லது அதிக கட்டுக்காடுகள் காரணமாக கைவிட்டுள்ளனர். அதனாலேயே கூட்டுறவு கிளைகளில் அந்த போதை மருந்து சிக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் மட்டும் ஆண்டுக்கு 3.5 முதல் 4 டன்கள் அளவுக்கு கோகோயின் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :
|