Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தில் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணி

சுதந்திர தினத்தில் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணி

By: Nagaraj Sat, 15 Aug 2020 8:53:50 PM

சுதந்திர தினத்தில் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணி

ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தன் முடிவை சுதந்திர தினத்தன்று அறிவித்துள்ளார். இன்று முதல் தான் சுதந்திரமானவன் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். இதற்கும் ஒரு காரணம் உள்ளது என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளாகவே தோனி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால் என் வழி தனி வழி. என் முடிவு எப்போதும் யாராலும் யூகிக்க முடியாது என்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்தவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

independence day,retirement,army,dhoni,information ,சுதந்திரதினம், ஓய்வு, ராணுவம், தோனி, தகவல்கள்

இடையில் ராணுவப்பணியில் இறங்கி இரண்டு மாதங்கள் சேவை செய்தார். அவருக்கு ராணுவப்பணி மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால்தான் இந்திய சுதந்திரத்தினத்தன்று தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வெளியானது. இந்நிலையில்தான் தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளுக்க பின்னர் அவர் மீண்டும் இந்திய ராணுவத்தில் இணைந்து சேவைப்பணிகள் மேற்கொள்வார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
|
|