Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாக்டீரியா தொற்றால் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழப்பு

பாக்டீரியா தொற்றால் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழப்பு

By: Nagaraj Thu, 13 Aug 2020 4:11:53 PM

பாக்டீரியா தொற்றால் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழப்பு

பாக்டீரியா தொற்றுக் காரணமாக வடகிழக்கு கென்யாவில் பல மாதங்களாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் இந்த உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தாக்கம் காரணம் அல்ல என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கால்நடை சேவைகள் இயக்குனர் சார்லஸ் ஓச்சோடோ கூறுகையில், ஒட்டகங்கள் ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக இறந்தன, இந்த பதக்டீரியா கால்நடைகளில் சுவாச நோயை ஏற்படுத்துகிறது.

camels,northern kenya,authorities,casualties ,ஒட்டகங்கள், வடக்கு கென்யா, அதிகாரிகள், உயிரிழப்பு

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாக்டீரியா தாக்கம் காரணமாக இரண்டு வயதுக்கும் குறைவான இளம் ஒட்டகங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், வடக்கு கென்யாவின் மார்சபிட் கவுண்டியில் உள்ள சுகாதார அதிகாரிகள், மார்சபிட்டில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

Tags :
|