Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பா வான்வெளியை பயன்படுத்த பல நாடுகளை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுக்கு தடை

ஐரோப்பா வான்வெளியை பயன்படுத்த பல நாடுகளை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுக்கு தடை

By: Nagaraj Mon, 23 Jan 2023 11:10:02 PM

ஐரோப்பா வான்வெளியை பயன்படுத்த பல நாடுகளை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுக்கு தடை

நியூயார்க்: தடை விதிப்பு... உலகின் பல நாடுகளை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஐரோப்பா வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களே இதற்கு பதிலாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் நேபாளத்தில் 72 பேர்களுடன் எத்தி விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த மொத்த பேர்களும் பலியாகினர். பொதுவாக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாவதும், அதனால் காயம் ஏற்படுவதும் அல்லது மரணம் ஏற்படுவதும் மிகவும் அரிதானதாகவே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உலக அளவில் பறந்த 4.17 மில்லியன் விமானங்களில் ஒரே ஒரு விமானம் மட்டும் பெரும் விபத்தில் சிக்கியிருந்தது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் வான்வெளியை பயன்படுத்த குறிப்பிட்ட சில விமான நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. குறித்த பட்டியலில், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

zimbabwe,venezuela,bluewing,iran,list,ban ,ஜிம்பாப்வே, வெனிசுலா, ப்ளூவிங், ஈரான், பட்டியல், தடை

இரண்டாவதாக அர்மேனியா, மூன்றாவது அங்கோலா, 4வது இடத்தில் காங்கோ, ஐந்தாவது இடத்தில் காங்கோ ஜனநாயக குடியரசு. இதில் 12வது இடத்தில் நேபாளம் உள்ளது. இங்குள்ள விமான சேவை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு ஐரோப்பா ஒன்றியம் தடை விதித்துள்ளது.

14வது இடத்தில் சியரா லியோன் மற்றும் 15வது இடத்தில் சூடான் உள்ளது. இந்த 15 நாடுகளின் விமான சேவை அல்லாமல் மேலும் 6 நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில விமான சேவை நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

வெனிசுலாவின் ஏவியர் ஏர்லைன்ஸ், சுரினாமின் ப்ளூ விங் ஏர்லைன்ஸ், ஈரானின் ஈரான் அசெமன் ஏர்லைன்ஸ், ஈராக்கின் ஈராக் ஏர்வேஸ், நைஜீரியாவின் மெட்-வியூ ஏர்லைன்ஸ் மற்றும் ஜிம்பாப்வேயின் ஜிம்பாப்வே ஏர்லைன்ஸ் ஆகியவையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.

Tags :
|
|