Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும் மற்றும் நாளை மதுரை பகுதிகளில் ட்ரோன் கேமரா இயக்க தடை

இன்றும் மற்றும் நாளை மதுரை பகுதிகளில் ட்ரோன் கேமரா இயக்க தடை

By: vaithegi Sun, 29 Oct 2023 07:48:30 AM

இன்றும் மற்றும் நாளை மதுரை பகுதிகளில் ட்ரோன் கேமரா இயக்க தடை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

இதனை அடுத்து இன்று இரவு மதுரையில் தங்கும் அவர், அதன்பின் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

அதன் பிறகு காரில் பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

drone,camera,madurai ,ட்ரோன் ,கேமரா ,மதுரை


இதை அடுத்து இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அன்றைய தினமே மதுரை வந்து சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுவருகிறார். இதனால் இன்றும் மற்றும் நாளை மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|