Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே இறக்குமதிக்கு தடை; பிரதமர் தகவல்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே இறக்குமதிக்கு தடை; பிரதமர் தகவல்

By: Nagaraj Thu, 27 Aug 2020 8:31:42 PM

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே இறக்குமதிக்கு தடை; பிரதமர் தகவல்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே, சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவு பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு இந்தியா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நமது இலக்கு. பாதுகாப்பு துறையில் 74 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, அதிகளவு பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

department of home affairs,manufacturing,imports,defense,prime minister ,உள்நாட்டு, உற்பத்தி, இறக்குமதி, பாதுகாப்பு துறை, பிரதமர்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாதுகாப்பு துறையில் பெரும் திறனை கொண்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதில் கவனம் செலுத்தவில்லை.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே, சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :