Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கான்பூரில் லங்கூர் குரங்கு மற்றும் கிளி வளர்ப்புக்கு தடை விதிப்பு

கான்பூரில் லங்கூர் குரங்கு மற்றும் கிளி வளர்ப்புக்கு தடை விதிப்பு

By: Nagaraj Sat, 27 June 2020 8:08:00 PM

கான்பூரில் லங்கூர் குரங்கு மற்றும் கிளி வளர்ப்புக்கு தடை விதிப்பு

கான்பூர் வனச்சரகம் லங்கூர் மற்றும் கிளி வளர்ப்பை தடை செய்துள்ளது.

செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு. நாய், பூனை, கிளி மட்டுமல்ல, யானை போன்ற விலங்குகளையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றிக் கொள்ளும் மனிதர்களை நாம் பார்த்திருக்கலாம்.

தற்போது காலம் மாறிவிட்டது. முதலில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது இயல்பான ஒன்றாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் செலவாகாது. ஆனால் இந்த விருப்பம் தற்போது மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது. சிலருக்கு கிளிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்குகள் மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது.

kanpur,prohibition,order,action,langur ,கான்பூர், தடை விதிப்பு, உத்தரவு, நடவடிக்கை, லங்கூர்

கான்பூர் வனச்சரகம் லங்கூர் மற்றும் கிளி வளர்ப்பை தடை செய்துள்ளது. இந்தத் தடையை மீறி லங்கூர் மற்றும் கிளியை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லங்கூர் மற்றும் கிளியை பிடித்து கூண்டில் அடைப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பிராணிகளை பிடிப்பவர்களும், வளர்ப்பவர்களும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையோ அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ செலுத்த வேண்டும். சில சமயங்களில், சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கான்பூரின் சமூக வனவியல் பிரிவு அரவிந்த்குமார் யாதவ் பிரதேச இயக்குநர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

Tags :
|
|
|