Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகாரப்பூர்வ பயணம் செய்யும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு விதித்த தடை

அதிகாரப்பூர்வ பயணம் செய்யும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு விதித்த தடை

By: Nagaraj Sun, 26 Feb 2023 9:26:48 PM

அதிகாரப்பூர்வ பயணம் செய்யும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு விதித்த தடை

இஸ்லாமாபாத்: தடை விதிப்பு... பாகிஸ்தான் அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது வணிக வகுப்பு விமானங்களில் பயணம் செய்வதற்கும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால், பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது வணிக வகுப்பு விமானங்களில் பயணம் செய்வதற்கும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

financial crisis,india,ministers, ,இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அரசு, பொருளாதார நெருக்கடி

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, அமைச்சர்களின் சம்பளத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர்கள் மற்றும் அரசு ஆலோசகர்களின் செலவுகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.

பிரதமர் ஷெரீப், “நாட்டைப் பாதுகாக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 76.4 கோடி அமெரிக்க டாலர் செலவைக் குறைக்கும் திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இது தவிர, நாங்கள் சர்வதேச செலாவணி நிதியத்திடம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகக் கேட்டுள்ளோம்.

Tags :
|