Advertisement

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விபரங்களை வெளியிட தடை

By: vaithegi Fri, 07 Apr 2023 3:46:32 PM

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விபரங்களை வெளியிட தடை

இந்தியா: ஆன்லைன் சூதாட்டம் குறித்த விபரங்களை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை ... இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே அதன் படி மத்திய அரசு ஏற்கனவே கடந்தாண்டு ஜூன் 13 மற்றும் அக் 2 ஆகிய தேதிகளில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை எந்தவொரு வழியிலும் வெளியிடக் கூடாது அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதனை மீறி விளம்பரங்கள் பல வெளியாகி இருக்கிறது.

ban,online gambling ,தடை ,ஆன்லைன் சூதாட்டம்

அதனால் மத்திய அரசு மீண்டும் வெளியிட்ட அறிக்கையில், சூதாட்ட இணையதளங்கள் குறித்த விளம்பரங்களை சில காலமாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி செய்தித்தாள்கள் வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தங்களது வலைத்தளத்தில் விளையாட்டு போட்டிகளை காண வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட சூதாட்ட வலைத்தளங்கள் ஊக்குவிப்பதாக மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும் என ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் பல ஆன்லைன் தலங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் இந்தஎச்சரிக்கையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
|