Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை; உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை; உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

By: Nagaraj Fri, 07 Aug 2020 8:03:56 PM

டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை; உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

அமெரிக்காவில் இந்த இரு செயலிகளுக்குமான தடை 45 நாட்களில் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் இரண்டு சீன செயலிகளும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகள், பயனாளர்களின் விபரங்களை திரட்டுவதாகவும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் அவர்களுக்கு சொந்தமான தகவல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வசம் சென்றுவிடுவதற்கான அச்சுறுத்தலை இது ஏற்படுத்துவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

tic tac toe,visat,order,signature,president trump ,டிக்டாக், வீசாட், உத்தரவு, கையெழுத்து, அதிபர் டிரம்ப்

அமெரிக்க அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரங்களை உளவுபார்க்கவும் அவர்களது தனிப்பட்ட விபரங்களை திரட்டி அச்சுறுத்துவதற்கும் கார்ப்பரேட்டுகளை உளவு பார்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி பயனடையும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதற்கும் டிக்டாக் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், டிக்டாக் செயலிக்கு உரிமையாளரான பைட்டான்ஸ் மற்றும் வீசாட் செயலிக்கு உரிமையாளரான டென்சென்ட் ஆகிய சீன நிறுவனங்களோடு அமெரிக்காவில் யாரும் அல்லது எந்த நிறுவனமும் எவ்வித பரிவர்த்தனைகளையும் வைத்துக்கொள்வதை தடை செய்வதாக ட்ரம்பின் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|