Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய வங்காளதேசம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய வங்காளதேசம்

By: Karunakaran Sun, 23 Aug 2020 6:31:06 PM

கொரோனா வைரஸ் பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய வங்காளதேசம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.34 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.09 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

bangladesh,pakistan,corona virus,corona prevalence ,பங்களாதேஷ், பாகிஸ்தான், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.94 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 1,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,598 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 34 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

வங்காளதேசத்தில் தற்போது கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து 1.79 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 15-வது இடத்தில் உள்ளது.

Tags :