Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பங்களாதேஷின் பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா அல் மொசின் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பங்களாதேஷின் பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா அல் மொசின் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

By: Karunakaran Mon, 29 June 2020 3:15:02 PM

பங்களாதேஷின் பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா அல் மொசின் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை கொரோனா ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வங்காளதேசத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர். கொரோனா காரணமாக 1738 பேர் உயிரிழந்துள்ளனர்.

bangladesh,defense secretary,corona death,abdullah al-mohsin chaudhary ,பங்களாதேஷ், பாதுகாப்பு செயலாளர், கொரோனா மரணம், அப்துல்லா அல் மொஹ்சின் சவுத்ரி

இந்நிலையில் வங்காளதேசத்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டார். அதன்பின் அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அப்துல்லா அல் மோசின் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 29-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் ஜூன் 6-ந்தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஜூன் 18-ந்தேதி மேலும் உடல்நிலை மோசமானதால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.


Tags :