Advertisement

இந்த மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கி விடுமுறை

By: vaithegi Mon, 06 Mar 2023 5:54:17 PM

இந்த மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கி விடுமுறை

இந்தியா: நாட்டில் இந்திய ரிசர்வ் வங்கி என்பது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. RBI வங்கி அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான விதிமுறைகளை வகுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிக்கும் வங்கி விடுமுறை நாட்களுக்கான பட்டியலை வெளியிடும்.

எனவே அதன்படி இம்மாதத்திற்கு 12 நாட்கள் வங்கி விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை தினங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முக்கிய பண்டிகை தினங்கள் இருக்கும். இந்த பண்டிகையை முன்னிட்டு அந்த பகுதிக்குட்பட்ட வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

bank,festival ,வங்கி ,பண்டிகை

இதையடுத்து அதன்படி வருகிற 7ம் தேதி அன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு டேராடூன், பேலாப்பூர், ஹைதராபாத்-தெலுங்கானா, குவஹாத்தி, ஜம்மு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கான்பூர், மும்பை, லக்னோ, பனாஜி, நாக்பூர், ஸ்ரீநகர் ராஞ்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இதே போல வருகிற 8-ம் தேதி அன்று ஹோலி பண்டிகை காரணமாக அகமதாபாத், அகர்தலா, போபால், ஐஸ்வால், சண்டிகர், புவனேஸ்வர், காங்டாக், டேராடூன், கான்பூர், இம்பால், ராய்ப்பூர், பாட்னா, ஷில்லாங், ராஞ்சி, சிம்லா, புது டெல்லி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற 9-ம் தேதி அன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

Tags :
|