Advertisement

நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்

By: vaithegi Wed, 26 Oct 2022 7:54:53 PM

நவம்பர் மாதத்திற்கான  வங்கி விடுமுறை நாட்கள்

இந்தியா: இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே அதன் படி நவம்பர் மாதம் மொத்தம் 10 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதர நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால் அவை வழக்கமான விடுமுறையாக கருதப்படும்.

இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் அரசால் கடைபிடிக்கப்படும் விடுமுறை நாட்களில் மட்டுமே பொதுவாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நவம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

bank holiday,november ,  வங்கி விடுமுறை ,நவம்பர் மாதம்


அந்த வகையில் நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா/குட்
நவம்பர் 8- குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா
நவம்பர் 11 – கனகதாச ஜெயந்தி/வாங்கல விழா
நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம்

அது தவிர, நவம்பர் 12 – 2-வது சனிக்கிழமை'
நவம்பர் 13 – ஞாயிறு
நவம்பர் 20 – ஞாயிறு
நவம்பர் 26 – 4-வது சனிக்கிழமை
நவம்பர் 27 – ஞாயிறு

இந்த நாட்களில் வங்கிகள் மட்டுமே மூடப்பட்டிருக்கும், மேலும் அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகளை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிட்டுள்ளது.

Tags :