Advertisement

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்கள்

By: vaithegi Sat, 01 Apr 2023 5:04:15 PM

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்கள்

இந்தியா: நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியானது முன்னதாகவே திட்டமிட்டு விடுமுறை தினங்களை அறிவித்து விடுகிறது. எனவே அதன்படி, நடப்பு ஏப்ரல் மாதத்தில் உள்ள விடுமுறை தினங்களை பார்வையிடும் போது, ஏப்ரல் 1 முதல் 9-ம் தேதி வரையிலான முதல் வாரத்திலேயே அதிகபட்சமாக 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.

அதிலும் குறிப்பாக, இந்த 7 நாட்கள் விடுமுறையானது அனைத்து மாநிலங்களிலும் பொருந்தாது. குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். முன்னதாக வெளியான அறிவிப்பின் படி, ஏப்ரல் மாத முழுவதுமாக 16 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

holiday,days ,விடுமுறை ,நாட்கள்


ஏப்ரல் மாத முதல் வார விடுமுறை :

ஏப்ரல் 1, 2023 – வருடாந்திர வங்கிகள் கணக்குகள் மூடப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். ஐஸ்வால், ஷில்லாங், சிம்லா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் வங்கிகள் திறந்திருக்கும்.
ஏப்ரல் 2, 2023 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 3, 2023 – மகாவீர் ஜெயந்தி (போப்பால், ஜெய்பூர் ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்)
ஏப்ரல் 4, 2023 – மகாவீர் ஜெயந்தி (அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூர், போபால், சண்டிகர், சென்னை, ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்).

இதனை தூது ஏப்ரல் 5, 2023 – ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஹைதராபாத்தில் வங்கி மூடப்படும்)
ஏப்ரல் 7, 2023 – புனித வெள்ளி (அகர்தலா, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்).
ஏப்ரல் 7, 2023 – 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 9, 2023 – ஞாயிற்றுக்கிழமை
இந்த 7 நாட்களில் தமிழ்கத்தில் ஏப்ரல் 1, 2, 4 மற்றும் 7ம் தேதிகளில் மட்டும் வங்கிகள் மூடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :