Advertisement

ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள்

By: vaithegi Fri, 23 Dec 2022 11:03:27 AM

ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள்

இந்தியா: இந்திய ரிசர்வ் வங்கியானது ஆண்டின் தொடக்கத்திலேயே மாத வாரியாக வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்துவிடும். எனவே அதன்படி, RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2023 ஜனவரி மாதத்தில் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் உள்பட மொத்தம் 14 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வெவ்வேறு விடுமுறைகளைக் குறிக்கும் வகையில் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்படும். அதிலும் குறிப்பாக, ஜனவரி மாதத்தில் குடியரசு தினம், பொங்கல் போன்ற முக்கிய நாட்கள் அதிக அளவில் வர உள்ளது.

holiday,january,bank ,விடுமுறை ,ஜனவரி , வங்கி

விடுமுறை பட்டியல்:

ஜனவரி 1 : புத்தாண்டு தினம் (அனைத்து மாநிலங்களிலும்) (ஞாயிறு)
ஜனவரி 5 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
ஜனவரி 11 : மிஷனரி தினம் (மிசோரம் மட்டும்)
ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 14 : மகரச் சங்கராந்தி (2ம் சனிக்கிழமை)
ஜனவரி 15 : பொங்கல்/மாக் பிஹு (ஞாயிறு)

ஜனவரி 22 : சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்) (ஞாயிறு)
ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
ஜனவரி 25 : மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)
ஜனவரி 26: குடியரசு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)
ஜனவரி 31 : மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம் மட்டும்)

Tags :