Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வங்கி அதிகாரி; கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி

விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வங்கி அதிகாரி; கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி

By: Nagaraj Mon, 13 July 2020 5:05:11 PM

விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வங்கி அதிகாரி; கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி

பிரதமரின் கண்டிப்பு... கொரோனா அச்சுறுத்தலால் நாடே நெருக்கடியான சூழலில் இருக்கும் போது வங்கி அதிகாரி ஒருவர் விலையுயர்ந்த கார்கள் வாங்கியதை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. எனவே, அரசு ஊழியர்களுக்கான மேற்படிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு, அநாவசியமற்ற செலவுகளை தவிர்க்குமாறு மத்திய அரசு துறைகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார்.

இப்படியிருக்க, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மன், 2 ஆடி சொகுசு கார்களை வாங்கியிருக்கும் தகவலை அறிந்த பிரதமர் மோடி கடும் கோபமடைந்துள்ளார். நாட்டிலேயே அதிக வாராக்கடன்களை கொண்ட வங்கியாக திகழ்ந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரியின் இந்த செயல் குறித்து, உடனடியாக தொலைபேசி மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுள்ளார்.

nirmala sitharaman,punjab national bank,pm modi,audi car ,
நிர்மலா சீதாராமன், பஞ்சாப் நேஷனல் வங்கி, பிரதமர் மோடி, ஆடி கார்

இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக, சம்பந்தப்பட்ட வங்கி சேர்மனை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். ‘கொரோனா சமயத்தில் இப்படிபட்ட செலவு தேவைதானா..? அந்தக் கார் உங்களிடம் இருந்தால், உங்களது பணிக்கு நாங்கள் உத்தரவாதம் கிடையாது,’ என ஒரு பிடி பிடித்துள்ளார்.

இதற்கு மறுநாளே, பஞ்சாப் நேஷனல் வங்கி சேர்மனிடம் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு போன் வந்தது. அதில், ‘இரு சொகுசு கார்களையும் திருப்பி கொடுத்துவிட்டேன்,’ என பதில் கிடைத்தது. பின்னர், இந்த தகவலை பிரதமருக்கு அமைச்சர் பகிர்ந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து பொதுத்துறை வங்கி சேர்மன்களுக்கும், ஒரு பொதுவான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதாவது, இனி அவசியமில்லாமல் வீண் செலவுகளையும் செய்யக் கூடாது, அதிக விலை கொடுத்த எந்த ஒரு பொருட்களையும் வாங்கக் கூடாது, என ஸ்டிரிட் ஆர்டர் போடப்பட்டுள்ளது.

Tags :