Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் - நிர்மலா சீதாராமன்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் - நிர்மலா சீதாராமன்

By: Karunakaran Sat, 01 Aug 2020 2:18:34 PM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் - நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது, ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

nirmala sitharaman,bank,micro enterprises,loan ,நிர்மலா சீதாராமன், வங்கி, தொழில் நிறுவனங்கள், கடன்

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். நான் கவனிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Tags :
|