Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பு

By: Nagaraj Wed, 28 Sept 2022 9:02:11 PM

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பு

புதுடில்லி: 5 ஆண்டுகள் தடை விதிப்பு... இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன

india,5 years,prohibition,central home,order ,இந்தியா, 5 ஆண்டுகள், தடை விதிப்பு, மத்திய உள்துறை, உத்தரவு

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம் தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags :
|