Advertisement

ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண் பானு அதையா காலமானார்

By: Nagaraj Fri, 16 Oct 2020 3:21:30 PM

ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண் பானு அதையா காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா (91) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இத்தகவலை அவரது மகள் அறிவித்தார்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான பானு அதையா பல்வேறு பரிசுகளை பெற்றவர். அனைவராலும் அறியப்பட்டவர். பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். 1983 ஆம் ஆண்டு வெளியான 'Gandhi' திரைப்படத்தில் அருமையாக ஆடை வடிவமைப்பு செய்ததற்காக ஆஸ்கார் விருதை பெற்றார்.

காந்தி திரைப்படம், இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தின் தாக்கத்திற்கு, பானு அதையாவின் பொருத்தமான ஆடை வடிவமைப்பு மெருகூட்டியது. இதற்காக உலகம் முழுவதும் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் குவித்தார் பானு அதையா.

first lady,oscar winner,deceased,ill ,முதல் பெண், ஆஸ்கார் விருது, காலமானார், உடல்நலக்குறைவு

அனைத்து பாராட்டுகளுக்கும் கிரீடம் வைத்ததுபோல, அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதிலும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது அதுதான் முதல் முறை என்பதால் நாடே பானு அதையாவை கொண்டாடியது. அதிலும், இந்தியாவிற்காக முதல் ஆஸ்கார் விருதை வென்றவர் ஒரு பெண் என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பானு அதையா, உறங்கிக் கொண்டிருக்கும்போதே காலமானார் என அவரது மகள் ராதிகா குப்தா தெரிவித்தார். பானு அதையாவின் இறுதிச் சடங்குகள் தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி தகன மைதானத்தில் நடந்தன.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூளையில் கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அவர் படுக்கையில் இருந்தார், அவரின் உடலின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது" என்று பானு அதையாவின் மகள் ராதிகா தெரிவித்துள்ளார்.

Tags :