Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் 7-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் 7-வது நாளாக தடை

By: vaithegi Mon, 17 Oct 2022 7:51:13 PM

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் 7-வது நாளாக தடை

ஒகேனக்கல் : தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீர்வரத்து நீடித்து வந்தது.

எனவே இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகள் வெள்ளநீரில் மூழ்கியது. ஒகேனக்கல் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

okanagan,ban ,ஒகேனக்கல் ,தடை

இதனை அடுத்து இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த மக்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து உயர்வால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

Tags :