Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 32 -வது நாளாக இன்றும் தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 32 -வது நாளாக இன்றும் தடை

By: vaithegi Thu, 11 Aug 2022 12:57:25 PM

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 32 -வது நாளாக இன்றும் தடை

ஒகேனக்கல் : ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. எனவே இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 32 -வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காவிரியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.

okanagan,cauvery,barrier ,ஒகேனக்கல் ,காவிரி ,தடை

இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 1 லட்சத்து 45 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மதியம் முதல் தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 40 ஆயிரத்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது. இதில் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் தொடர்ந்து கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. .

Tags :