Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 27-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 27-வது நாளாக தடை

By: vaithegi Sat, 06 Aug 2022 10:14:49 AM

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 27-வது நாளாக தடை

ஒகேனக்கல் : கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

மேலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளும் இன்றும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. காவிரியில் கரை புரண்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 27-வது நாளாக தடை நீடிக்கிறது.

okanagan,ban ,ஒகேனக்கல் ,தடை

எனவே ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் வரத்தை 24 மணி நேரமும் அதிகாரிகள் மிக தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 77 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 57 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 400 கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது.

Tags :