Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை

குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை

By: vaithegi Thu, 06 July 2023 09:56:44 AM

குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை


திருநெல்வேலி : அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது ..... திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ளது குற்றால அருவி. தென்காசி மாவட்டத்தில் தென்காசியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் 2000க்கும் மேற்பட்ட தாவரங்கள், மர வகைகளை கடந்து 800க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை கடந்து, அந்த வழியாக தண்ணீர் வந்து செல்கிறது.

இதனால் மருத்துவ குணங்கள் நிறைந்த குற்றால அருவியில் குளிக்கும் போது பிணிகள் நீங்கும் என்பது என சொல்லப்படுகிறது.குற்றால அருவியில் சுமார் 10,000 முதல் 15 ஆயிரம் நபர்கள் வரை சீசன் காலங்களில் பயணிகள் மகிழ்கின்றனர்.

flooding,kutala falls ,வெள்ளப்பெருக்கு ,குற்றால அருவி

தென்மேற்கு பருவமழை காலங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மற்றும் சீசன் காலங்களாக இருந்தாலும் , அதன் தொடர்ச்சியாக வரும் வடகிழக்கு பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த நிலையில் குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க முடியாத சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

Tags :