Advertisement

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிப்பு

By: vaithegi Fri, 11 Nov 2022 6:11:31 PM

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிப்பு

குமரி: 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை .... குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்து கொண்டு வருகிறது.

dilparapu,barrier ,திற்பரப்பு ,தடை

இதனால் 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு பாசன குளங்கள் வேகமாக நிரம்பி கொண்டு கொண்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

அதனால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அருமநல்லூர், ெதரிசனங் கோப்பு, ஈசாந்திமங்கலம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் வயல் உழவுப் பணி மற்றும் நடவு பணி நடந்து கொண்டு வருகிறது.

Tags :