Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் ஆதனாம்

அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் ஆதனாம்

By: Karunakaran Tue, 08 Sept 2020 11:38:19 AM

அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் ஆதனாம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 2 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.

next virus,epidemic,tetros adenam,who ,அடுத்த வைரஸ், தொற்றுநோய், டெட்ரோஸ் அடினம், உலக சுகாதார அமைப்பு

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம், கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல. அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பான சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :