Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

By: Karunakaran Thu, 03 Sept 2020 2:42:20 PM

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, அமெரிக்கா அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

distribute,corona vaccine,trump administration,america ,விநியோகித்தல், கொரோனா தடுப்பூசி, டிரம்ப் நிர்வாகம், அமெரிக்கா

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் 1-ம் தேதிக்குள் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களும், தேசிய பாதுகாப்பு ஊழியர்கள், 65 வயதுக்கு அதிகானவர்கள் போன்ற பல்வேறு பிரிவினருக்கும் இந்த தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அஸ்ட்ரா செனேக்கா நிறுவனத்தின் தடுப்பூசி உள்பட 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் நிலையில் உள்ளது. இருப்பினும் இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என மாகணங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள சம்பவம் உலக நாடுகளையே அதிரவைத்துள்ளது.


Tags :