Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உணவு பொருட்கள் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எச்சரிக்கை

உணவு பொருட்கள் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எச்சரிக்கை

By: Nagaraj Wed, 15 June 2022 5:37:52 PM

உணவு பொருட்கள் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எச்சரிக்கை

இலங்கை: உணவு பொருள் விலை உயர்வு... பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் செல்லும் பயணத்திற்கு, டிசம்பர் மாதம் 1790 ரூபா செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆகவே அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

activities,bond,price,increase,impact,sunil jayaratne ,செயற்பாடுகள், பாண், விலை, அதிகரிக்கும், பாதிப்பு, சுனில் ஜயரத்ன

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அதீத பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது. இதனால், கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது.

இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது. மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரித்தால், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருளின் விலை டிசம்பர் மாதத்தில் 1790 ரூபாவாக அதிகரிக்கும். பாணின் விலை டிசம்பர் மாதத்தில் 1790 ரூபாவாக அதிகரிக்கும். இதனால், என்ன நடக்கும்? இது அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|