செயின்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்
By: Nagaraj Wed, 26 July 2023 11:59:23 PM
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் செயின்ஸ் கடற்கரையில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ஸ் கடற்கரையில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கி உள்ளன.
செவ்வாய்க்கிழமை அன்று அல்பானி நகருக்கு கிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் கூட்டமாக நீந்தி வந்த திமிங்கலங்கள், கரைக்கு அருகில் உள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றை காப்பாற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்ட நிலையில், நேற்றிரவு 51 திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் 46 திமிங்கலங்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags :
whales |
effort |
beached |